பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

samedi 31 mai 2014

இன்றைய அறிமுகம் - வந்தனா சிவா




இந்திய  உத்தராஞ்சல் பகுதியில்  டேராடூன் நகரில் 5/11/1952 இல் பிறந்த சிறந்த எழுத்தாளர், சூழியலாளர், தத்துவவாதி என பன்முகம் கொண்டவர் வந்தனா சிவா.

20க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதியுள்ளார். பட்டப் படிப்பை வேதியலிலும், முதுகலைப் படிப்பை விஞ்ஞானத்  தத்துவத்திலும் முடித்த இவர்,குவாண்டம் கோட்பாட்டில் "மறை மாறிலிகள், வட்டாரங்கள்" எனும் தலைப்பில் 1978இல் கனடாவின் வெஸ்டர்ன் ஆண்டரியோ பல்கலை கழகத்தில் தன்  முனைவர் பட்டத்தைப் பெற்றார். இந்திய இன்ஸ்டிடுட் ஆப் சைன்ஸ் நிறுவனத்தில் சூழலியல் கற்றார்.

பாரம்பரிய இயற்கை வேளாண்மை, மரபணு காத்தல் போன்றத் துறைகளில் சலியாது உழைப்பவர். இயற்கை வளத்துக்கு தனி மனித உரிமம் கோருதலை எதிர்ப்பவர்.

 1980இல் "நர்மதா நதியைக் காப்போம்" என்ற அமைப்பால் நதியில் பலத் தடுப்புகளை ஏற்படுத்தி ஆயிரக்கணக்கான ஏழைகள் இடம் பெயர்வதிலிருந்து காத்தார். "நவதான்யா" என்ற பெயரில் விவசாயிகள் நலனுக்கும், இயற்கை உற்பத்திக்கும் குரல் கொடுத்தார். Tribunal Russell sur la Palastine தோன்றக் காரணமான குழுவில் இவரும் ஒருவர்.

ரைட் லைவ்லி ஹூட் 1993, சிட்னி அமைதிப் பரிசு 2010, புகுவோகா ஆசிய கலாச்சாரப் பரிசு 2012 என பல விருதுகளுக்குச் சொந்தக்காரர். பகிர் நோபல் பரிசினை இயற்கை வேளாண்மை, அதன் நவீன வளர்ச்சி போன்றவற்றில் பெண்கள் பங்குக்காக 1993 இல் பெற்றார். 2001இல் பகிர் நோபல் பரிசினை (கோல்ட் மான் பரிசு) மெக்சிக் நாட்டு மக்களின் இயற்கை வளத்தைக் காக்கவும், வளர்க்கவுமான  உரிமைக்கும் வாழ்வுக்கும் போராடியதற்காகப் பெற்றார்.

கிராமத்து பெண்களுக்கு மரங்களைக் காக்கும் உணர்வையும்,  இயற்கை விதைகளைப்  பயன் படுத்தத் தேவையான விழிப்பையும் உண்டாக்குவதன் மூலம் விவசாயிகளின் தற்கொலைகளுக்கு முற்றுப்புள்ளி இடுகிறார்.  நல்ல விதைகள் மனித குலத்துக்கானவை என்பதே இவர் முழக்கம். மரபணு மாற்ற எதிரியாகச் செயல்படும் இவரது சேவை உலகத்துக்குத் தற்போது மிகத் தேவையான ஒன்று.

திருமதி சிமோன்

Aucun commentaire:

Enregistrer un commentaire