பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

jeudi 27 février 2014

புதிய கண்டுபிடிப்புகள்


Tobii REX:
வளர்ந்துவரும் தொழில்நுட்ப துறையில் தற்போது கண்ணசைவின் மூலம் கணனிகளை இயக்கக்கூடிய புத்தம் புதிய சாதனம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. Tobii REX எனப்படும் புதிய எலக்ட்ரானிக் சாதனம் USB இணைப்பு மூலம் செயற்படக்கூடியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனம் புதியதாக அண்மையில் வெளியிட்ட விண்டோஸ் 8 இயங்குதளங்களில் செயற்படக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது  இதன் ஸ்கேனர் கண்ணின் கருவிழியின் அசைவுகளை வைத்து கட்டளைகளை கம்ப்யூட்டருக்கு அனுப்புகிறது.இது 2013ம் ஆண்டின் துவக்கத்தில் அறிமுகமானது . இதன் விலை சுமார் 995 அமெரிக்க டாலர்கள் ஆகும்.
 இதன் வரவால் மவுசின்(mousse) மவுசு குறைந்துவிடுமாம்.மறைந்துவிடுமாம்

வாட்ஸ்ஆப்:

 வாட்ஸ்ஆப் என்பது ஆன்லைன் மெசேஜிங் சர்வீஸ் ஆகும். செல்போனில் இருந்து மெசேஜ், வீடியோ, புகைப்படங்களை நண்பர்களுக்கு, நண்பர்கள் குழுவுக்கு அனுப்ப உதவும் அப்ளிகேஷன் தான் வாட்ஸ்ஆப். இதன் மூலம்  மாநிலம் விட்டு மாநிலம்,  நாடு விட்டு நாடு மெசேஜ் அனுப்பலாம். அதுவும் கட்டணம் இல்லாமல். இது தான் இளம் தலைமுறையினரை
வெகுவாக கவர்ந்துள்ளது. ட்விட்டரை விட 200 மில்லியன் பேர் கூடுதலாக அதாவது  மாதத்திற்கு 450 மில்லியன் பேர் வாட்ஸ்ஆப்பை பயன்படுத்துகிறார்கள்.
செல்போன் வைத்திருப்பவர்கள் வாட்ஸ்ஆப்பை டவுன்லோட் செய்து அதில் உங்களின் செல்போன் எண்ணை டைப் செய்து, மெசேஜ் மூலம் வரும் கோடை பயன்படுத்தி சரிபார்த்தால் அதை பயன்படுத்தலாம்.
 புதிய நட்புகளை உருவாக்கிக் கொள்ளவும், புதுப்பித்துக் கொள்ளவும் வசதி ஏற்படுத்தித் தரும் பேஸ்புக் அதனை வாங்க முடிவு செய்துள்ளது.
இதற்கான விலையாக 16 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிர்ணயிக்கப் பட்டுள்ளதாம். இந்திய மதிப்பில் சுமார் 995,84 கோடி ரூபாய் ஆகும்.
450 மில்லியன் பேர் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்தினாலும் அதன் அலுவலக ஊழியர்களின் பலம் எவ்வளவு தெரியுமா.. ஜஸ்ட் 55 பேர்தானாம்.

‘டிசைனர் பேபி’:

கருத்தரிப்பு என்பது இயற்கை வரம். பிறக்கப் போகும் குழந்தை ஆணா, பெண்ணா என்று தெரிந்துகொள்ள இப்போது மருத்துவத்தில் வழிகள் உள்ளன.

செயற்கை கருவூட்டல் முறை, குழந்தை பெற முடியாத தம்பதிகளுக்கு உதவத்தான் முதலில் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இப்போது வெளிநாடுகளில் செயற்கை கருவூட்டலில் ஏகப்பட்ட விரிவாக்கம் வந்துவிட்டது. அதன் லேட்டஸ்ட் தொழில் நுட்பம் தான் - ‘ப்ரி இம்ப்ளான் டேஷன் ஜெனடிக் டயாக்னோஸ்டிக்ஸ்’ (பி. ஜி. டி.) முறை. கருப்பையில் உருவாகி, முதிராத கருவாக உள்ள நிலையில் , முட்டைக்கருவுயிரில் சில மாற்றங்களை செய்ய இந்த தொழில்நுட்பம் உதவுகிறது.  நோயற்ற, எதிர்பார்த்த குணத்துடன் கூடிய கருவுயிராக மாற்றி அமைக்கலாம். இதுதான் ‘டிசைனர் பேபி’ என்று அழைக்கப்படுகிறது.

 பரம்பரையாக தொடரும் நோய்களை தடுக்க இந்த புதிய தொழில் நுட்பம் உதவும் என்பது நிபுணர்களின் வாதம். கருப்பையில் வளரும் போது, முதிராத கருவுயிரில் உள்ளசெல்லில் சில மாற்றங்கள் செய்தால் குழந்தைப் பருவத்தில் வரக்கூடிய ‘டவுண் சிண்ட்ரோம்’ போன்றவை வராமல் தடுக்கப்படும். ஆணாக இருந்தால் பெண்ணாக மாற்ற முடியும். எந்த ஒரு மரபு நோயும் வராமல் தடுக்கப்படும். மேலும் வலுவான குறிப்பிட்ட நல்ல குணங்களுடன் கூடியதாகவும் அமைய வாய்ப்புண்டு உடற்கூறு ரீதியான எல்லா குறைபாடுகளும் நீக்கப்படும்.

 பிறக்கப்போகும் குழந்தை எப்படி அமைய வேண்டும் என்று விரும்பும் இளைய தலைமுறையினர் அதிகரித்து வருகின்றனர்.கருவை பாதுகாக்கும் வகையில் இப்போது செயல்பூர்வமான எந்த சட்டமும் நடைமுறையில் இல்லை என்பதால், இளைய தலைமுறையினரிடையே இந்த புது செயற்கை கருவூட்டல் பரவி விடும் ஆபத்து உண்டு.

மனித ஆரோக்கியத்திற்கு உதவும் கைக்கடிகாரங்கள்!

 மனிதர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் வகையில் Garmin நிறுவனம் கைக்கடிகாரம் இரண்டை அறிமுகம் செய்துள்ளார். Forerunner 220 மற்றும் 620 என்ற அடையாளத்துடன் வெளியாகியுள்ள இவை இரண்டும், இதயத்துடிப்பு மற்றும் உடல் சூட்டை கருத்தில் கொண்டு, ஒருவர் பயணித்த தூரம், விரையமான கலோரி அளவு என்பவற்றை கணிப்பதுடன்; உடலில் ஏற்படும் மாற்றங்களுக்கேற்ப மேற்கொள்ளவேண்டிய பயிற்சி, சிகிச்சைகளையும் முன்மொழிகிறது.

Aucun commentaire:

Enregistrer un commentaire