பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

vendredi 30 août 2013

தமிழரும் எண்களும்

                                            

ஆயிரம் (1000) என்ற எண்ணை எழுதும் பழைய முறை : ௲ ; புதிய முறை : ௧௦௦௦
எட்டுக்கு அடுத்தது ‘ஒன்பது’ அல்ல, ‘தொண்டு’. 9 என்ற எண்ணின் பெயர் தொண்டு.

“… காலென பாகென வொன்றென
இரண்டென மூன்றென நான்கென ஐந்தென
ஆறேன வேழென வெட்டெனத் தொண்டென.. "

இந்தத் தொடர் பரிபாடலில் வருகிறது. எட்டுக்கு அடுத்தது தொண்டென இது உள்ளிட்ட பல பழைய இலக்கியங்களில் வருகிறது . அதன்படி 90 என்பது ‘தொன்பது’, 900 என்பது ‘தொண்ணூறு’ என  அமையும்  என்று வாதிடுபவர்களுண்டு .

தமிழ் இலக்கியத்திலுமே எண்களுக்கு அசையாத முக்கியத்துவம் உள்ளது. எட்டுத்தொகை, பத்துப்பாட்டு , புறநானூறு, அகநானூறு, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, நான்மணிக்கடிகை, களவழி நாற்பது, நாலடியார் என.


தமிழ் எண்கள்
***********
* ௧ = 1
* ௨ = 2
* ௩ = 3
* ௪ = 4
* ௫ = 5
* ௬ = 6
* ௭ = 7
* ௮ = 8
* ௯ = 9
* ௰ = 10
* ௰௧ = 11
* ௰௨ = 12
* ௰௩ = 13
* ௰௪ = 14
* ௰௫ = 15
* ௰௬ = 16
* ௰௭ = 17
* ௰௮ = 18
* ௰௯ = 19
* ௨௰ = 20
* ௱ = 100
* ௱௫௰௬ = 156
* ௨௱ = 200
* ௩௱ = 300
* ௲ = 1000
* ௲௧ = 1001
* ௲௪௰ = 1040
* ௮௲ = 8000
* ௰௲ = 10,000
* ௭௰௲ = 70,000
* ௯௰௲ = 90,000
* ௱௲ = 100,000 (lakh)
* ௮௱௲ = 800,000
* ௰௱௲ = 1,000,000 (10 lakhs)
* ௯௰௱௲ = 9,000,000
* ௱௱௲ = 10,000,000 (crore)
* ௰௱௱௲ = 100,000,000 (10 crore)
* ௱௱௱௲ = 1,000,000,000 (100 crore)
* ௲௱௱௲ = 10,000,000,000 (thousand crore)
* ௰௲௱௱௲ = 100,000,000,000 (10 thousand crore)
* ௱௲௱௱௲ = 1,000,000,000,000 (lakh crore)
* ௱௱௲௱௱௲ = 100,000,000,000,000 (crore crore)

நம்மில் பலருக்கு கோடி, மில்லியன், பில்லியன் அதற்கு மேல் தெரியாது. ஆனால் 2300 ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் அனந்தம் வரை அறிந்திருந்தனர். முடிந்தால் அனந்தம் வரை எண்ணிப் பாருங்கள். மூச்சு வாங்குகிறதா.... (ஆமாம். ஒன்றுக்கு பக்கத்தில் 175 சுழியங்கள். )
பத்து முதல் அனந்தம் வரை
10   பத்து = 100
100  பத்து = 1000
1000 பத்து = 10,000
10,000 பத்து = லட்சம்
1,00,000 பத்து = பத்து நூறாயிரம்
10 நூறாயிரம் பத்து   =  கோடி
கோடி     கோடி =  மகா கோடி (10,000,000,00,00,000)
மகாகோடி  கோடி = சங்கு(சங்கம்)
சங்கு(சங்கம்) கோடி = மகாசங்கு (மகாசங்கம்)
மகசங்கு    கோடி  = விந்தம்
விந்தம்     கோடி  = மகவிந்தம்
மகவிந்தம்  கோடி  = பதுமம் (சமுத்திரம்)
பதுமம்     கோடி  = மகாபதுமம் (மகா சமுத்திரம்)
மகாபதுமம்    கோடி  =  குமுதம்
குமுதம்       கோடி  =  மகா குமுதம்
மகா குமுதம்  கோடி  =  சிந்து
சிந்து          கோடி  =  மகா சிந்து
மகாசிந்து      கோடி  =  வெள்ளம்
வெள்ளம      கோடி  =  மகா வெள்ளம
மகா வெள்ளம் கோடி  =  பிரளயம்
பிரளயம்       கோடி  =  மகா பிரளயம்
மகா பிரளயம்  கோடி  =  சஞ்சலம்
சஞ்சலம்       கோடி  =  மகா சஞ்சலம்
மகா சஞ்சலம்  கோடி  =  வலம்புரி
வலம்புரி       கோடி  =  மகா வலம்புரி
மகா வலம்புரி  கோடி  =  தன்பணை
தன்பணை      கோடி  =  மகா தன்பணை
மகாதன்பணை  கோடி  =  கண்வளை
கண்வளை      கோடி  =  மகாகண்வளை
மகா கண்வளை கோடி  =  அனந்தம்

Aucun commentaire:

Enregistrer un commentaire