பொறுப்பாளர்கள்

பொறுப்பாளர்கள்

கவிஞர் பாரதிதாசனின் தாயகப் பயணம்

mercredi 27 juillet 2011

எண்ணப் பரிமாற்றம்

அன்புடையீர்,

நம்புகிறோமோ இல்லையோ, சில அறிவுக்கு பொருந்தியும் பொருந்தாமலுமான நம்பிக்கைகள் உலகில் உலவிக்-கொண்டிருப்பது உண்மை. அதில் முக்கிய இடம் பெறுவது ஜாதகம், ஜோசியம், எண் அல்லது இலக்க ஆராய்ச்சி போன்றவை. இந்தியர்கள் இவற்றில் மிகத் தேர்ந்தவர்கள்.  உதாரணமாக பூமத்திய ரேகையை சூரியன் கடக்கும் தினங்கள் வழக்கமான தேதிகளுக்கு முன்னதாகவே நிகழ்வதைக் கண்டறிந்தவர்கள் இவர்களே. இந்நிகழ்ச்சி 25827 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படுகிறது என்றும் கணக்கிட்டுள்ளனர்!

இசை எப்படி ஏழு சுரங்களை ஆதாரமாகக் கொண்டுள்ளதோ, நிறச்சேர்கைக்கு எப்படி ஏழு வர்ணங்கள் இன்றியமையாததோ  அதுபோல் நமது கணக்கீடுகள் எல்லாவற்றிக்கும் ஒன்று முதல் ஒன்பது வரையிலான எண்கள் அடிப்படை. படைப்புச் சக்தி பொருந்திய ஏழு கிரகங்களும்  காந்தசக்தியை வெளியிடுகின்றன. அவை பூமி முழுவதும் பரவுகின்றன. இந்து, சீன, எகிப்திய, கிரேக்க, ஹிப்ரு இரகசிய போதனைகள் ஒவ்வொன்றிலும் "7"  மறைவான தன்மை கொண்ட தெய்வ சக்தியைக் குறிப்பிடுகிறது. "1 " என்னும் எண்ணை முதல் காரணம் அல்லது கடவுள்  என்று  கொண்டால், முடிவற்றது என்பதனை வட்டம் அல்லது பூஜ்யம் எனக் கொள்ளலாம். 1 +0  என்பது 10 ஆகிறது. எத்தனை பூஜ்யங்களை அடுக்கினாலும் மறைபொருள் எண்ணான ஏழால் வகுத்தால் 27  அதாவது 2 + 7  = 9  கிடைக்கும்.

"9 " கிரக மொழியில் உலகப் பொருட்களுடன் தொடர்பு உள்ளதாக இருக்கிறது. கிரக வீதி ஒவ்வொன்றும் 30 ° அளவுடைய 12  பிரிவுகளாக உள்ளது. ஒவ்வொரு பிரிவினாலும் பூமி மாற்றம் கொள்கிறது. நட்சத்திரக் கோடுகளின் பொருள்: சூரியனிடமிருந்து அல்லது கடவுளிடமிருந்து உயிர் தோன்றி, முறையே சந்திரன், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனிக்குச் செல்கிறது. சனி மரணத்தின்  அடையாளம். சனியிடமிருந்து உயிர் சூரியனிடம் அல்லது கடவுளிடம் செல்கிறது. வாழ்வெனும் சங்கிலியின் கணுக்களாக பிறப்பும், இறப்பும் நிகழும; மணிகள்,நாட்கள்,மாதங்கள்,ஆண்டுகள் உள்ளன.  அவை ஒவ்வொன்றுக்கும் உரிய எண்ணும்,இடமும் அளிப்பது சிந்தனைக்கு உரியதாகவேப் படுகிறது.

திருமதி சிமோன்